×

பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும்: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அட்வைஸ்

சென்னை: பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுற்றுசூழலை பாதுக்காக்கும் முயற்சியாக மத்திய அரசின் ஆணையின் படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வழக்கமாக வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில் கசிந்திடாது கவனம் செலுத்த வேண்டும். ஆதலால் உங்கள் வாகனத்தை இயக்க கடினமாக இருக்கும் அல்லது ஓட்டும்போது வாகனம் குலுங்கி செல்லக்கூடும். இது தொடர்பாக பெட்ரோல் விற்பனையாளராகிய நாங்கள் தீவிர தரக்கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து பெட்ரோலினை விநியோகம் செய்து வருகின்றோம். பெட்ரோல் டேங்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு.

பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்க சிறிதளவு தண்ணீர் போதுமானது. இது வாகனத்தின் சேமிப்பு கலனில் உள்ள பெட்ரோலின் எத்தனாலை தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதிக்கு சென்று தங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.


Tags : Vehicles should be carefully maintained as 10% ethanol is mixed in petrol: Petroleum Vendors Association Advice
× RELATED மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை...