இந்திய வரலாற்றில் முதல்முறையாக சதம் அடித்தது பெட்ரோல் விலை; மராட்டிய மாநிலம் பர்பானியில் ஒரு லிட்டர் ரூ.100.16-க்கு விற்பனை

பர்பானி: இந்திய வலராலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. மராட்டிய மாநிலம் பர்பானியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்துள்ளது. பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 16 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97 ரூபாய் 38 காசுகளாக இருந்தது. நாசிக்கில் இருந்து 340 கி.மீ. தொலைவுக்கு பெட்ரோல் டீசல் கொண்டுவரப்படுவதே அதிக விலைக்கு காரணம் என்றும் அந்த மாவட்ட பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். பெட்ரோல், டீசலுக்கு நாட்டிலேயே அதிக வரி விதிக்கும் ராஜஸ்தானில் பெட்ரோல் விலை 99 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 91.19 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்பதால் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியால் கிடைக்கும் லாபத்தை ஈடு செய்யும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரிகளை மத்திய அரசு உயர்த்தியது. தற்போதைய நிலையில் சில்லறை விற்பனையில் பெட்ரோலுக்கு 61%, டீசலுக்கு 56% வரியாக மத்திய, மாநில அரசுகள் வசூலிக்கின்றன. அதாவது பெட்ரோல், டீசலுக்கு நாம் செலுத்தும் பணத்தில் நாம் செலுத்தும் பணத்தில் பாதிக்கும் மேல் மத்திய, மாநில அரசுக்கு வாரியாகவே அலுத்துகிறோம்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை 16 ரூபாய் 77 காசுகளும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்து இருப்பதால் ஓராண்டுக்கு பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறும் நிலையில் கலால் வரியை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. இதே நிலை நீடித்தால் தமிழகம் உள்பட நாடு முழுவதுமே பெட்ரோல் விலை சதமடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>