×

சென்னை டெஸ்ட் போட்டியை ஹெலிகாப்டரில் இருந்து போட்டோ எடுத்த மோடி: டிவிட்டரில் பதிவு

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது சேப்பாக்கம் மைதானத்தை புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் இதே சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறு விமானப்படை தளத்திற்கு மோடி ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்தபடி சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Tags : Modi ,Test match ,Chennai ,Post , Modi takes photo of Chennai Test match from helicopter: Post on Twitter
× RELATED நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த்!