தேவேந்திர குல வேளாளர் பற்றி மோடி பேசியதில் மகிழ்ச்சி: ராமதாஸ் கருத்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில்  பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 1989ல் மதுரை தமுக்கம் திடலில் ஒரு தாய் மக்கள்  மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன.

Related Stories:

>