×

சீனியர் சிட்டிசன்களுக்கு இன்று முதல் இலவச பயண அட்டை: மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டமானது, கடந்த 2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30.01.2020 வரையில் ஏறத்தாழ, 3,51,617 நபர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று காரணமாக, அத்தியாவசியப் பணிகள் தவிர, பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இத்திட்டத்தின் மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோர் மற்றும் புதியதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த டோக்கன்களை, இன்று (15.2.2021) முதல் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

அலுவலக நாட்களில் காலை 8.00 மணி தொடங்கி இரவு 7.30 மணி வரையில், மாதம் ஒன்றுக்கு 10 வீதம் (பிப்ரவரி முதல் ஜுலை வரை) 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். புதியதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கான விண்ணப்பப்படிவம் அந்தந்த மையங்களில் வழங்கப்படும். மேலும், மாநகர் போக்குவரத்துக் கழக வலைத்தள முகவரியான, www.mtcbus.tn.gov.inல் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அட்டைகள் அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட 21 பணிமனைகளிலும், சென்ட்ரல், பிராட்வே, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட 19 பேருந்து நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : First Free Travel Card for Senior Citizens Today: Bailiff Transportation Announcement
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...