நர்ஸ் வீட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை

புழல்: புழல் புனித அந்தோணியார் நகரை சேர்ந்தவர் ஓமனா (56). இவர், மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற இவர், இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 சவரன், ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

Related Stories:

>