டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பனப்பாக்கம் ஊராட்சி ஈன்றபாளையம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதனின் விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் சேடை உழுவதற்காக, கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தன்(53) டிராக்டரை ஓட்டினார். அப்போது, எதிர்ப்பாராத விதமாக சேற்றில் சிக்கி டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த  ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>