தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் உத்திரமேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியது: தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் கூற முடியும் என்றார்.  

* திருப்போரூரில் 100 அடி உயர கொடியேற்ற விழா

திருப்போரூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் தையூர் ஒ.எம்.ஆர். சாலையில் 100 அடி உயர கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.

Related Stories:

More
>