பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆனது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சன்குளம் கிராமத்தில் மூன்று நாட்களுக்கு முன் சந்தனமாரிக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வனராஜா (51) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>