×

அஷ்வின் இரட்டை சதம்!

இந்திய அணி ஸ்பின்னர் அஷ்வின் தனித்துவமான சாதனை ஒன்றை நிகழ்த்தி அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை 391 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவற்றில் 200 முறை இடது கை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்த சாதனை மைல் கல்லை எட்டும் முதல் பவுலர் அஷ்வின் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முரளிதரன் (191), ஆண்டர்சன் (இங்கிலாந்து, 190), மெக்ராத் (ஆஸி. 172), ஷேன் வார்ன் (ஆஸி. 172) அடுத்த இடங்களில் உள்ளனர்.
* சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் நேற்று 5 விக்கெட் கைப்பற்றிய அவர் 268 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங்கை (265) பின்னுக்குத் தள்ளினார். இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 350 விக்கெட் வீழ்த்தி முதலிடம் வகிக்கிறார்.
* சொந்த மண்ணில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை அஷ்வின் 23வது முறையாக நிகழ்த்தி 2வது இடம் பிடித்துள்ளார். கும்ப்ளே (25 முறை) முதலிடத்தில் உள்ளார்.
* இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது, இந்திய மண்ணில் அந்த அணி எடுத்த 2வது குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக,1981ல் மும்பையில் நடந்த டெஸ்டில் 102 ரன்னுக்கு சுருண்டுள்ளது.
* ஆசிய மைதானங்களில் பென் போக்சின் சராசரி ரன் குவிப்பு 79.75 ஆக உள்ளது (7 இன்னிங்சில் 1 சதம், 1 அரைசதம்). 2 முறை மட்டுமே 20 ரன்னுக்கு குறைவாக ஆட்டமிழந்துள்ளார்.
* இந்திய அணியின் முதல் இன்னிங்சில் (329 ரன், 95.5 ஓவர்), இங்கிலாந்து உதிரியாக 1 ரன் கூட விட்டுக்கொடுக்காமல் உலக சாதனை படைத்தது. முன்னதாக, 1955ல் நடந்த டெஸ்டில் பாகிஸ்தானை 328 ரன்னுக்கு (187.5 ஓவர்) ஆல் அவுட் செய்த இந்தியா, அதில் எக்ஸ்ட்ராவாக ஒரு ரன் கூட கொடுக்காமல் சாதனை படைத்திருந்தது.
* இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 வீரர்கள் டக் அவுட்டாகினர். சொந்த மண்ணில் இப்படி 4+ டக் அவுட் ஆவது 9வது முறையாகும்.

Tags : Ashwin , Ashwin's double century!
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...