ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு காடுவெட்டி குருவின் மகன் திடீரென கைது

ஜெயங்கொண்டம்: மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை பாமகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் உருவாக்கி அதன் தலைவராக உள்ளார். இவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கரடிக்குளம், விருத்தாசலம் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே அமைப்பின் கொடியை ஏற்ற சென்றார். அப்போது சட்டம், ஒழுங்கு பாதிக்கக்கூடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனலரசன் உட்பட 36 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனிடையே அந்த அமைப்பினர் கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் நகர செயலாளர் மாதவன்தேவா உள்ளிட்டோர் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா தடை உத்தரவு இருக்கும் நிலையில் தடையை மீறி கூட்டாக ஒன்று கூடியதாக திருமாவளவன் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

Related Stories:

More