பாகிஸ்தான் உதவியுடன் சியாச்சினை சீனா பிடிக்கும்: காங். எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி நேற்று அளித்த பேட்டி: இந்தியா தனது எல்லையில் பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத் தல்களை சந்தித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு அற்பமான அளவுக்கு மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ராணுவத்திற்கு முக்கியத்துவம் தராமல், நாட்டிற்கு துரோகம் செய்துள்ளனர். இதே போல், கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங்க் திசோ ஏரிப் பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்விரு பகுதியிலும் படைகளை விலக்குவது என்பது சீனாவிடம் சரணடைவதற்கு சமமாகும். 1962ல் கூட கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னைக்குரிய நிலமாக இருந்ததில்லை. இவ்வாறு படைகளை விலக்குவது, பொதுவான பகுதிகளாக அறிவித்தல் ஆகியவை நமது நிலத்தை நாமே எடுத்து கொடுப்பது போலாகும். இதன் தீவிரத்தை பாஜ அரசு புரிந்து கொள்ளாவிட்டால், பாகிஸ்தான் உதவியுடன் அடுத்ததாக சீனா சியாச்சினில் கை வைத்து பிடிக்க முயற்சிக்கும் என்றார்.

Related Stories: