சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ அரபிக்கடலில் படகு மீது மோதிய ராட்சத மீன்

மங்களூரு:கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் சிலர் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க அரபிக் கடலுக்கு சென்றனர். மீன்பிடித்த பிறகு அவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ராட்சத மீன் ஒன்று அதிவேகமாக வந்து படகின் மீது மோதியது. இதனால், படகு பயங்கரமாக ஆட்டம் கண்டது. அதில் இருந்த மீனவர்கள் அதிரச்சி அடைந்தனர். மீன் மோதியதில் படகின் ஒரு பகுதி சேதமானது. மீனவர்கள் படகை ஆய்வு செய்தனர். அப்போதுதான், படகு மீது ராட்சத மீன் மோதியது அவர்களுக்கு தெரிந்தது. மோதிய மீனும் அதே பகுதியில் மூக்கில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிய சுற்றியது. அது, துளு வகையைச் சேர்ந்தது. மீனவர்கள் அந்த மீனை செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அது, வைரலாகி வருகிறது. சிறிது நேரம் படகை சுற்றிய அந்த மீன், பிறகு ஆழ்கடலுக்குள் நீந்தி சென்று விட்டது.

Related Stories:

>