×

ஜப்பானின் புகுஷிமா பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு...! மக்கள் அச்சம்

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானின் புகுஷிமா பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 4.13 மணியளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ள இந்த நில அதிர்வின் மையமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிமீ ஆழத்தில் இருந்துள்ளது. புகுஷிமா  மற்றும் மியாகி எல்லைப்பகுதிகளில் இந்த நில அதிர்வானது நான்கு புள்ளிகள் வரை உணரப்பட்டுள்ளது. ஆனால் இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக நேற்று இரவு புகுஷிமா பகுதியில் 7.1 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக 140 பேர் காயமடைந்தனர். இந்த அதிர்வானது தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியது. மார்ச் 11, 2011 அன்று, ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 20,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் நூறாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.2, சுனாமி உருவாகி, புகுஷிமா அணு உலைகள் முற்றாக சீர்குலைந்தன என்பது நினைவுகூறத்தக்கது.

Tags : earthquake ,Japan ,Fukushima prefecture , Another earthquake in Japan's Fukushima prefecture: 5.2 on the Richter scale ...! People fear
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...