×

கடனுக்காக கொடுத்த நிலத்தை திருப்பி தராததால் கட்டிடதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை: சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கடனுக்காக கொடுத்த நிலத்தை திருப்பித் தராததால் விரக்தி யில் கட்டிடதொழிலாளி விஷம்குடித்து தற்கொலைசெய்து கொண்டார். கடன்கொடுத்தவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தில் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மகன் ஜேசுதாஸ் (32). கட்டிட தொழிலாளி. கிறிஸ்டோபர் மற்றும் அவரது மகன் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது விவசாய நிலத்தை அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு கடன் வாங்கியதாக தெரிகிறது.

அந்தக் கடனுக்கான வட்டியை முறையாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடனுக்காக ஒப்படைத்த நிலத்தை கடன் கொடுத்த நபர் பிளாட் போட்டு விற்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்ததால் கொடுத்த நிலத்தை ஜேசுதாஸ் திருப்பிக் கேட்டுள்ளார்.கடன் கொடுத்த நபர் திருப்பித் தராததால் ஜேசுதாஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி செடிக்கு தெளிப்ப தற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் ஜேசுதாஸ் கிடந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொ ண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஜேசுதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜேசுதாசுக்கு கிளாரா ராணி(28) என்ற மனைவியும்,  7வயதில் ஒரு மகனும் உள்ளனர். சடலம் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் இரவு முழுக்க ஜேசுதாஸ் சாவுக்குக் காரணம், கடன் கொடுத்து விட்ட நிலத்தைத் தராத நபர்தான் என பேச்சு எழுந்தது. இதனிடையே இன்று காலை 8.15மணிக்கு ஜேசுதாஸ் உறவினர்கள்  அவரது சடலத்தைக் கொண்டு வந்து அன்னமங்கலம் ஊருக்கு நடுவே சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசுதாசு க்கு கடன் கொடுத்த நபர்மீது நடவடிக்கை எடுத்து, கொடுத்த நிலத்தை திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தி வருகின்றனர். அரும்பாவூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Builder ,suicide ,road ,Relatives , Construction worker commits suicide by drinking poison after failing to repay loan: Relatives stir up body
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...