குளச்சல் தொகுதி யாருக்கு?.. முட்டி மோதும் பா.ஜ.- அதிமுக நிர்வாகிகள்: புதியவர் வருகையால் பா.ஜ. வட்டத்தில் கலக்கம்

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகளில் குளச்சலும் ஒன்று. இங்கு தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரின்ஸ் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் பா.ஜ., பல தேர்தல்களிலாக ெதாடர்ந்து போட்டியிட்டு வருகிறது. குளச்சல் தொகுதியில் கடந்த 2 முறை பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை  இழந்த மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ் இந்த தேர்தலிலும்  3 வது  முறையாக போட்டியிட விரும்புகிறார். 2016 ல் பா.ஜ. தனித்து போட்டியிட்டு 24  ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 2 ம் இடத்தை பிடித்தது. அ.தி.மு.க.சார்பில்  போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் 3ம் இடத்தை பிடித்தார்.

வரும் தேர்தலில் பா.ஜ. - அ.தி.மு.க.கூட்டணி என்பதால் குளச்சல்  தொகுதியில் பா.ஜ. எளிதில் வெற்றி பெறும் என பா.ஜ.வினர் சிலர் தாங்கள்  போட்டியிட தயாராகி வருகின்றனர். பா.ஜ.வுக்கே மீண்டும் குளச்சல் தொகுதி  ஒதுக்கப்படும் என பா.ஜ.வினர் கருதுகின்றனர். இதனால் பா.ஜ.வை சேர்ந்த முக்கிய  புள்ளிகள்  கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்தும் உள்ளது. இந்த நிலையில்  கட்சி தலைமையிடமும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னாருக்கும் மிகவும்  நெருக்கமான  குளச்சல் அருகே ரீத்தாபுரத்தை சேர்ந்த ஆர்சி கிறிஸ்தவரான அமல் மார்ட்டின் சிங் என்பவரும் தனக்குத்தான் குளச்சல் தொகுதியில் ‘சீட்’ என கூறி காரில் பா.ஜ. கொடி கட்டி தொகுதியில் வலம் வருகிறார். இவர் கோயம்புத்தூரில் விவசாய விதை பண்ணை தொழில் நடத்தி வருகிறார்.

கடந்த பல முறை சீட் கிடைக்காத பா.ஜ.முக்கிய புள்ளிகள் இந்த முறை  எப்படியாவது ‘சீட்’வாங்கியே தீர வேண்டும் என காய் நகர்த்தி வரும் நிலையில் குளச்சல் தொகுதியில் ‘சீட்’கேட்டு அமல் மார்ட்டின்சிங் வலம் வருவது  கட்சிக்கு உழைத்த பா.ஜ.தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.,வுக்கு கணிசமான வாக்கு உள்ளதால் குளச்சல் தொகுதியை பெற்றால் வென்றுவிடலாம் என்று அ.தி.மு.க.வும்  கணக்கு போட்டு  வருகிறது. குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, தமிழ்நாடு மீனவ கூட்டறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், அதிமுக மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெ.கே.திலக், முன்னாள் மவட்ட செயலாளர் சிவ செல்வராஜன் உட்பட பலர் சீட் பெறும் முயற்சியில் உள்ளனர்.

Related Stories: