திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் உலா வருவது வழக்கம். இங்கு வாகனங்கள் செல்வதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தும் வகையில் செல்லும் அனைத்து வகையான வாகனங்களையும் தடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி மலையடிவார பகுதிகளில் அதிகளவு வனவிலங்குகள் நடமாடும் இடங்களில் வாகனங்கள் செல்லும் வழிகளை கண்டறிந்து நிரந்தர பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வனத்துறையினர் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கான்சாபுரம், பிளவக்கல் அணை என சுமார் 15 இடங்களில் பேரி கார்டுகளை வைத்துள்ளனர்.