×

இடைக்கால பட்ஜேட்டுக்கு பதில் முழு நிதிநிலை அறிக்கையையே தாக்கல் செய்ய அதிமுக அரசு முடிவு: திமுக எம்.எல்.ஏ விமர்சனம்

சென்னை: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜேட்டுக்கு பதில் முழு நிதிநிலை அறிக்கையையே தாக்கல் செய்ய அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடையேறும் ஆண்டில் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம் இதன் படை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள தமிழகத்தில் வரும் 2021 - 22-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அதிமுக அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முழு பட்ஜெட்டாகவே தாக்கல் செய்ய நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் 22-ம் தேதி பஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலை மனதில் வைத்தே பஜெட்டில் பொதுமக்களுக்கு பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ள தமிழக அரசு இதற்காக மாநில ஜிடிபிஎல் 2 சதவிகிதம் அளவிற்கு கடன்பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.வி.தியாகராஜன் ஆட்சியில் இருந்த இத்தனை ஆண்டுகள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாத அதிமுக அரசு மரபுகளை மீறி தேர்தல் நிறத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு வரை பஜெட்டிற்கும் செலவீனங்களுக்கும் 3 சதவிகிதம் வரை மட்டுமே வித்தியாசம் இருந்ததாக எம்.எல்.ஏ.தியாகராஜன் கூறினார். தற்போது இந்த வித்தியாசம் 40 சதவிகிதம் வரை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யும் பட்ஜெட் வெற்றுக்காகிதம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


Tags : government ,AIADMK ,DMK MLA , AIADMK government decides to file full financial statement in response to interim budget: DMK MLA review
× RELATED பிரதமர் மோடி தலைமையிலான அரசு...