×

சூட்டிங் மட்டம் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் வாகனம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் சாலையோரங்களில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் 10வது மைல் பகுதியில் சூட்டிங் மட்டம் உள்ளது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில், ஊட்டி-கூடலூர் சாலையில் வெகு தூரம் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். சில சமயங்களில் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் சென்று விடுகின்றனர்.

இது போன்ற சமயங்களில் கனரக வாகனங்கள் வந்தால், ஒன்றிற்கு ஒன்று இடம் கொடுக்க முடியாமல் தினறுகின்றனர். மேலும், பெரும்பாலான சமயங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஊட்டி-கூடலூர் சாலையின் ஏதாவது ஒருபுறம் வாகனங்களை நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : road ,shooting level area , Traffic congestion due to parking on both sides of the road in the shooting level area
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி