×

கடும் பனி பொழிவால் நிறம் மாறிய சூட்டிங் மட்டம்

ஊட்டி: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் உறைபனி விழுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் சோலைகள் காய்ந்து போக துவங்கியுள்ளன. குறிப்பாக, புல்வெளிகள் அனைத்தும் காய்ந்து ேபாய் காணப்படுகிறது. எப்போதும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் சூட்டிங் மட்டம் புல்வெளி பனியில் கருகி பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

பச்சை நிறமின்றி, பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் சூட்டங்மட்டத்தை கண்டு, இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.


Tags : Shooting level that changed color due to heavy snowfall
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...