×

அரசு கல்லூரிகளில் பணி நியமனத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு முறை அளிக்கப்படுவதாக புகார்..!

சென்னை: அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிமுறைகள் மீறப்பட்டும், சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கடந்த 2019-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியீட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லுரிகள் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குநர்களுக்கும், கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் மற்றும் அதற்க்கு மேலும் பணியாற்ற கூடிய கௌரவ விரிவுரையாளர்களை பணிவன்முறை படுத்துவதற்கான பணி சான்றிதழ் சரிபார்ப்பதற்கு சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சமூக நீதி, மற்றும் இடஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக அளிக்கும் நடவடுக்கை என பேராசிரியர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 15,16-ம் தேதிகளில் சென்னை, வேலூர்,மற்றும் தருமபுரி ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களும் 17,18-ம் தேதிகளில் கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்கள்.

கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தம் செய்வது குறித்து எந்த ஒரு விதிமுறைகளும் இதுவரை தமிழக அரசால் வெளியிடப்படாதா நிலையில் எப்படி எந்த பணி நியமனம் நடைபெறுகிறது என பேராசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Tags : Complaint that social justice and reservation system is being given in employment in government colleges ..!
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...