×

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2,800-க்கு விற்பனை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.600-ல் இருந்து ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை பண்டிகை நாட்கள், மற்றும் சுபமுகூர்த்த நாட்களுக்கு முந்தைய தினங்களில் வெளியூர்களில் இருந்து பல டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த நாட்களில் பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆயின. விலையும் கூடுதலாக இருந்ததால் வியாபாரிகள் லாபம் அடைந்தனர். இவற்றை கொள்முதல் செய்ய கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கூடுவர்.

தோவாளையில் உள்ள மலர் தோட்டங்களில் இருந்து மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓசூர், பெங்களூரு, உதகை மற்றும் வெளியூர்களில் இருந்து வழக்கத்தைவிட 200 டன்னிற்கும் மேலான பூக்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இந்த நிலையில், தற்போது ஒரு கிலோ மல்லிகை ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.600-ல் இருந்து ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : flower market ,Kanyakumari district , Kanyakumari, Dovalai, Flower Market
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...