×

வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர்; இனிய வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி: மோடி உரை

சென்னை: வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி பிரதமர் மோடி உரையை சென்னைக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார். சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். இனிய வரவேற்பு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என நன்றி தெரிவித்தார். தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார். கல்லணை கால்வாய் சீரமைப்பால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் பயனடையும் என கூறினார். நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி தானிய உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளது தமிழ்நாடு என பேசினார்.

636 கிலோ மீட்டருக்கு கல்லணை புதுபிக்க இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். சென்னையில் இருந்து முக்கியமான கட்டமைப்புகளை தொடங்கி உள்ளோம் என கூறினார். தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்தார்.

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்,நெல் உயர குடி உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்

என்ற ஒளவையார் பாடலை மேற்கொள்காட்டி பேசினார்.

கொரோனா பொதுமுடக்க சூழல் இருந்த போதும் மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்துள்ளன என கூறினார். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோநகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த நேர்ததில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 119 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பணிக்காக 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என பேசினார். சென்னை துறைமுகத்திற்கும் காமராஜர் துறைமுகத்திற்கும் இடையே போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறினார். விழுப்புரம், தஞ்சை ரயில் பாதை உணவு தானியங்களை கொண்டு செல்வதை எளிதாக்கும் என தெரிவித்தார். இதே நாளில் புல்வாமா தாக்குதலில் நாம் நமது வீரர்களை இழந்துள்ளோம் என்பதை நாம் மறக்கக் கூடாது என கூறினார்.

ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம், கல்விச்சாலைகள் வைப்போம், நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம், ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

என்ற பாரதியார் பாடலை மேற்கொள்காட்டி ஆயுதங்களை முக்கியத்துவம் பற்றி மோடி பேசினார்.

தேவேந்திர குல வேளாளர் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்:
தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது மத்திய அரசு என கூறினார். 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். தேவேந்திர குல வேளாளர் சகோதர, சகோதரிகள் பாரம்பரிய பெயரால் அழைக்கப்படுவர் என கூறினார். தேவேந்திர குல வேளாளர் என்பது பெயர் மாற்றம் மட்டுமானது அல்ல, சுய கவுரவத்தை காக்கும் என தெரிவித்தார்.

இலங்கை வாழ் தமிழ்கள் மீது மத்திய அரசு அக்கறை:
இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகள் மீது மத்திய அரசு அக்கறை காட்டி வந்துள்ளதாக மோடி பேசினார். வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன என கூறினார். இலங்கை தமிழர்களின் உரிமைகள் குறித்து அங்குள்ள தலைவர்களிடம் வலியுறுத்தும் ஒரே அரசு மத்திய அரசு என கூறினார். இலங்கை தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்துள்ளோம் என கூறினார்.

மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது:

மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது என கூறினார். அவர்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது என பேசினார். தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகயைள மத்திய அரசு உறுதி செய்யும் என கூறினார். இலங்கையால் எப்போது கைது செய்யப்பட்டாலும் மீனவர்கள் உடனே விடுவிக்கப்பட்டுள்ளனர் என உரையாற்றினார். யாழ்ப்பாணத்துக்கும்-மன்னாருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 300-க்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் எஞ்சிய படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் இந்தியாவில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.  நன்றி வணக்கம் என தமிழில் பேசி உரையை பிரதமர் மோடி முடித்தார்.


Tags : speech ,Hello Chennai ,Hello Tamil Nadu ,Modi , Hello Chennai, Hello Tamil Nadu, Tamil, Prime Minister
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...