ஜ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் செல்கிறார் மோடி: உற்சாக வரவேற்பு அளிக்கும் தொண்டர்கள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தடைந்தார். ஜ.என்.எஸ். கடற்படை தளம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். நேப்பியர் பாலம் அருகே உள்ள கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் மோடி செல்கிறார். சாலை வழியாக செல்லும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை வரவேற்று ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலம் அருகே பிரதமர் வருகைக்காக வாழை மரங்கள் மற்றும் கரும்பு வைத்து வழியெங்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தை மோடி தொடங்கி வைக்கிறார். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது. சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரயில் பாதையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Related Stories:

More