பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பழைய தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வந்த மலை ஓரத்தில் அடர்ந்த பகுதியில் பிறந்து ஓரிரு நாட்களே ஆன குழந்தை சடலம் ரத்த காயங்களுடன் சிதைந்த நிலையில் நேற்று காலை கிடந்தது. அந்த நேரத்தில் ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அடர்த்தியான மலையோர பகுதி என்பதால் குரங்குகளோ, நாய்களோ அந்த குழந்தை உடலை கடித்து குதறி இருக்கலாம் தெரிந்தது.  வயிற்றின் கிழ் பகுதி சிதைக்கப்பட்டுள்ளதால் ஆணா, பெண்ணா என தெரியாமல் இருந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>