காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை: பிரதமர் சென்னை வருகையொட்டி இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்க்கண்டவாறு திருப்பிவிடப்படும். கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசை வாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம். அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்சர் ெபன்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்லலாம். சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம். இதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்ைகயில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>