×

சித்ரவதைகளுக்கு பெயர் போன சர்ச்சைக்குரிய குவாண்டனமோ சிறை மூடல்: அமெரிக்க அதிபர் பைடன் விருப்பம்

வாஷிங்டன்: கடும் சித்ரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான  குவாண்டனமோ சிறையை நிரந்தரமாக மூட அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவின் பேரில், குவாண்டனமோ கடற்கரையில் 2002ம் ஆண்டு பலத்த பாதுகாப்பு மிக்க ரகசிய சிறை உருவாக்கப்பட்டது.  தனது நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களையும், தீவிரவாதிகள் உள்ளிட்டோரையும் அமெரிக்க நிர்வாகம் இங்கு அடைத்து  வைக்கிறது.  இங்கு கைதிகள் கொடூரமாக சித்ரவதை செய்யப்படுவதாக 2004ம் ஆண்டு செய்திகள் பரவின. இதனால், இச்சிறையை மூட வேண்டும் என்று பல போராட்டங்களும் நடந்தன. ஆனால், புஷ் நிர்வாகம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு ஒபாமா அதிபர் பதவியேற்றபோது, இச்சிறையை மூட நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் தந்தார். சிறைக் கைதிகளில் பெரும்பாலானோர் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். பலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சிறையை முழுமையாக மூடவில்லை. டிரம்ப் அதிபரான பிறகு கிட்டத்தட்ட ஜார்ஜ் புஷ் போலவே இந்த விவகாரத்தில் நடந்து கொண்டார். ஒபாமா நிர்வாகத்தில் ஜோ பைடன் துணை அதிபராகப் பதவி வகித்தபோதே குவாண்டனமோ சிறை விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டினார். தற்போது அவர் அதிபராகியுள்ள நிலையில், குவாண்டனமோ சிறையை நிரந்தரமாக மூட திட்டமிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன. ‘குவாண்டனமோ சிறையை தன்னிச்சையாக மூடிவிட முடியாது. அதற்கான சம்பிரதாயங்கள் முடிய சிறிது கால அவகாசம் தேவை,’ என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ஜென் ஸாகி கூறியுள்ளார்.

சிறையில் 41 கைதிகள்
குவாண்டனமோ சிறையில் கடந்த 2003ம் ஆண்டில் அதிகபட்சமாக 680 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். கடும் விமர்சனங்கள் காரணமாக இவர்களில் 532 போர் கைதிகளை ஜார்ஜ் புஷ் விடுதலை செய்தார். ஒபாமா ஆட்சியின்போது 197 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்போது, இந்த சிறையில் 41 கைதிகள் மட்டுமே உள்ளனர்.

Tags : Guantanamo ,Biden ,US , Controversial Guantanamo prison closure, known for torture: US President Biden's choice
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...