தென் மாவட்டங்களுக்கு பாஜ தேசிய தலைவர்கள் படையெடுப்பு

பாஜ  தேசிய தலைவர்கள் தொடர்ச்சியாக தென்மாவட்டங்களுக்கு வரவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாஜ கோட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி கோட்ட பாஜ தேர்தல் பணி பொறுப்பாளர்கள்  சிறப்பு ஆலோசனை கூட்டம், நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 5 மாவட்ட தேர்தல் பணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தலையொட்டி வருகிற 16ம் தேதி முதல் கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட  மாவட்டங்களுக்கு தொடர்ந்து தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தர உள்ளனர். அவர்களை வரவேற்பது மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி  அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: