×

கிள்ளியூர் தொகுதியும்... வெற்றி பெற்றவர்களும்

தமிழகத்தில் வரிசைப்படி 234 வது சட்டமன்ற தொகுதி என்பதால் ‘கிள்ளியூர்’ தொகுதியை கடைகோடி தொகுதி என்றும் அழைக்கலாம். கடலோர பகுதியை சார்ந்தும், கரை பகுதிகளுடன் சேர்ந்தும் காணப்படுகின்ற இந்த தொகுதி திருவிதாங்கூர்  - கொச்சி சட்டமன்ற தேர்தல், சென்னை மாகாண சபை தேர்தல் என்று 1952 முதல் காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் வாய்ப்பை வழங்கி வந்துள்ளனர். முதலில் தமிழ்நாடு காங்கிரசும், பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் இங்கு வெற்றி  பெற்றது. பழம்பெரும் தலைவர்களான பொன்னப்பநாடார் மூன்று முறையும், நேசமணி, வில்லியம் தலா ஒரு முறையும் இங்கு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றம் உருவான பின்னர் 1977, 1980ல் பொன்.விஜயராகவனும் 1984ல் டி.குமாரதாசும் ஜனதா கட்சி சார்பில் நின்று இங்கு வெற்றி பெற்றனர். 1989ல் பொன்.விஜயராகவன் சுயேட்சையாக நின்று தொகுதியை கைப்பற்றினார்.  1991ல் ஜனதாதளம், 1996ல் தமாகா, 2001ல் தமாகா என்று தொடர்ந்து தேர்தல்களில் வென்று டி.குமாரதாஸ் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டார். 2006, 2011 தேர்தல்களில் ஜாண் ஜேக்கப் காங்கிரஸ் சார்பிலும், 2016ல்  ராஜேஷ்குமார் காங்கிரஸ் சார்பிலும் இங்கு வெற்றி பெற்றார்கள்.



Tags : Killiur ,constituency ,winners , Killiur constituency and ... winners
× RELATED கோயிலில் திருடிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை