குப்பை தரம் பிரிக்கும் வளாகத்தில் தீ விபத்து

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சூழ்புனல் கரை பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 36வது வார்டு ஒருங்கிணைந்த குப்பைகளை தரம் பிரிக்கும் வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்திலிருந்து குப்பைகளை தரம்  பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மாநகராட்சி ஊழியர்கள் பணியை முடித்து விட்டு சென்றனர்.  இந்நிலையில், ேநற்று காலை அந்த வளாகத்தில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில்  வியாசர்பாடி மற்றும் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையங்களிலிருந்து 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குப்பை கொட்டும் வளாகம் என்பதால் இதில் பெரிய அளவிற்கு யாருக்கும் எந்த  பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் கடும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Related Stories:

>