4வது சுற்றில் நடால்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் இங்கிலாந்தின் கேமரான்  நோரியுடன் (69வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (2வது ரேங்க்) 7-5, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 14 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீரர்கள்  மெட்வதேவ் ருப்லேவ் (ரஷ்யா), பாக்னினி (இத்தாலி), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5-7, 5-7 என்ற நேர் செட்களில் சக  வீராங்கனை கரோலினா முச்சோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி, ஸ்விடோலினா, எலிஸ் மெர்டன்ஸ், டோனா வேகிச், ஜெனிபர் பிராடி ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி  உள்ளனர்.

Related Stories:

>