20 ஆயிரம் லஞ்சம் வாங்கி திருட்டு கும்பலை தப்பவிட்ட பெண் இன்ஸ்பெக்டர்: ஆயுதப்படைக்கு மாற்றம்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி போலீசாரும், வேலூர் ஏஎஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு போலீசாரும் கடந்த ஜனவரி மாதத்தில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேரை மடக்கி  விசாரித்ததில், அண்டா, குண்டா உள்ளிட்ட பொருட்களை திருடி வந்திருப்பது தெரியவந்தது. இதனால் 3 பேரையும் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தநிலையில், இதே குற்றவாளிகளை 10 நாட்களுக்கு முன்பு  தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், வழக்கறிஞர் ஒருவரின் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் புனிதா 20 ஆயிரத்தை வாங்கி கொண்டு விடுவித்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் எஸ்.பி.  செல்வகுமார், டிஐஜி வனிதா கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் புனிதாவுக்கு நேற்று முன்தினம் மெமோ வழங்கப்பட்டது. மேலும், வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி செல்வகுமார் நேற்று  உத்தரவிட்டார்.

Related Stories:

More