கேரள வனத்துறையினர் அட்டகாசம்: பெரியாறு அணைப்பகுதியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு: தமிழக விவசாயிகள் போராட முடிவு

கூடலூர்:  பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கேரள வனத்துறையினர் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி வருகின்றனர்.  இது குறித்து கேரள வனத்துறை  அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வனப்பகுதியில் யானையின் வழித்தடத்தில் மரங்கள் இடையூறாக இருப்பதால், அவைகள் வெட்டப்படுகின்றன’’ என்றார்.  இது குறித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்க இணைச்செயலாளர் கம்பம்  ரஞ்சித்குமார் கூறுகையில், ‘‘புலிகள் சரணாலயப்பகுதியில் மரங்களை கேரள வனத்துறை வெட்டும்போது, அதே அனுமதியில் பேபி அணையை பலப்படுத்த தளவாட பொருட்கள் கொண்டு செல்ல இடையூறாக இருக்கும் 23 மரங்களை வெட்டி,  152 அடி தண்ணீர் தேக்க தமிழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 19ம் தேதி கண்காணிப்பு குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி தமிழக பொதுப்பணித்துறை வலியுறுத்தா விட்டால் தமிழக பொதுப்பணித்துறை  அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’’ என்றார்.

Related Stories:

>