×

புரத சக்தி நிறைந்துள்ள கடல் பாசியை உணவாக மாற்றும் ஆஸி. விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி

சிட்னி : ஆஸ்திரேலிய கடல் விஞ்ஞானிகள் நுண்பாசி வகை ஒன்றை மனிதர்களுக்கான உணவாக மாற்றுவதற்கான வழியை கண்டறிந்துள்ளனர். இந்த நுண்பாசி வகை இறைச்சி  மற்றும் முட்டை போன்ற உணவுகளுக்கு மாற்றாக இருக்கும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆஸ்திரேலிய கடல் பகுதியில் காணப்படும் ஒருவகை பாசிகளை ஆராய்ச்சி செய்து வந்த அந்நாட்டு விஞ்ஞானிகள், மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான புரத சக்தி அதில் அதிகளவு நிறைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த பாசிகளை மனிதர்களின் உணவாக மாற்றும் ஆய்வக சோதனையில் ஈடுபட்டு இருந்த அவர்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய உணவு சந்தைகளில் இந்த கடல் பாசி உணவு வகை அறிமுகம் ஆகியுள்ளது.

Tags : Aussie ,scientists , கடல் பாசி
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...