அனைத்து ரயில் சேவைகளை தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை: படிப்படியாக அதிகரிக்கப்படும்: ரயில்வே வாரியம் தகவல்..!!

சென்னை: அனைத்து ரயில் சேவைகளை தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு ரயில்களின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பயணிகள் ரயில்கள் விரைவு வண்டிகளாகவும், விரைவு ரயில்கள் அதிவிரைவு வண்டிகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 42 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரீமியம் இண்டெண்ட் என்னும் சிறப்பு கொள்கையின் மூலம் வாடிக்கையளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு ரயில்வே காவலர்கள் பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். ரயில்வே உதவி எண்ணான 139-ஐ 24 மணி நேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 65%-க்கும் அதிகமான ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரியில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>