வீட்டில் தூங்கிய 2 குழந்தைகளை தூக்கி வீசிய குரங்கு..குளத்தில் வீசிய ஒரு குழந்தை உயிரிழப்பு: தஞ்சையில் சோகம்!!

தஞ்சை : தஞ்சையில் பச்சிளங் குழந்தையைக் குரங்கு தூக்கிச்சென்று அகழியில் வீசியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெயர் புவனேஷ்வரி. இவர்களுக்கு கடந்த வாரம் தஞ்சை அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில், பிறந்து 8 நாட்களான குழந்தைகளை வீட்டில் உறங்க வைத்துவிட்டு, தாய் புவனேஸ்வரி குளிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் குரங்குகள் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி, வீட்டிற்குள் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை தூக்கிச் சென்றுள்ளது.

குழந்தைகளின் அழுகுரல் கேட்டு வெளியே வந்த புவனேஷ்வரி, குரங்குகள் குழந்தைகளை தூக்கியதை பார்த்து  கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது ஒரு குழந்தையை வீட்டின் மேற்கூரையில் குரங்கு வீசி விட்டு சென்றுள்ளது. அக்குழந்தை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். மற்றொரு குழந்தையை காப்பாற்ற பொதுமக்கள் குரங்கைத் துரத்தியபோது, குரங்கு குழந்தையை அகழியில் வீசயுள்ளது. இதையடுத்து குழந்தை சடலமாக மீட்கபட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>