தோற்போம் என பயத்தால் அதிமுக பத்திரிகைகளில் விளம்பரம்: பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சி தோல்வியைத் தழுவும்: ப.சிதம்பரம் விளாசல்..!

காரைக்குடி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் அதிமுக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சி தமிழகத்தில் தோல்வியைத் தழுவும் என தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது: நாட்டில் 36 மாதங்களாக எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்த பட்ஜெட் யாருக்காக என்பது பற்றிய விவாதத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் மொத்த பணமதிப்பில் 73 சதவீதம் யார் கைகளில் உள்ளது? 1% மக்களின் கைகளில் உள்ளது. அவர்களுக்கும் அவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அளித்த கடன் தள்ளுபடி ரூ 2,38,000 கோடி, வரிச்சலுகை ரூ 1,45,000 கோடி என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்பொழுது அறிவித்துள்ள பட்ஜெட் யாருக்கு உதவிகளும் சலுகைகளும் தந்திருக்க வேண்டும்? விவசாயிகள், தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், , நடுத்தர மக்கள் ஆகியோருக்கு தான் உதவ வேண்டும்.

ஆனால், 36 மாதங்களாக மேற்கண்ட எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும்,  பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சி தமிழகத்தில் தோல்வியைத் தழுவும். இதனையடுத்து, தமிழகத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் முதல்வருக்கு மைனஸ் மார்க் மட்டுமே போட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>