பல்லடத்தில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் : முதல்வரின் பேச்சை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற பொதுமக்கள்.. அதிமுகவினர் அதிர்ச்சி!!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை பொருட்படுத்தாமல் மக்கள் கலைந்து சென்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்போடு பிரச்சாரம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல்லடம் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் முதல்வர் பழனிசாமி உரையற்றினார்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர் ஆவேசமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே மக்கள் சாரை சாரையாக அவரது பிரச்சார வேனை கடந்து சென்றனர். அதிமுக தொடர்ச்சியாக வென்ற பல்லடத்தியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மக்கள் பொருட்படுத்தாமல் கலைந்து சென்றதால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories:

More
>