×

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங், ஏடிஎம் உள்ளிட்ட சேவைகள் வரும் 15ம் தேதி வரை கிடைக்காது என அறிவிப்பு!!

டெல்லி :இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் வரும் 15ம் தேதி வரை கிடைக்காது என்று அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பான மென்பொருள் இணைப்பு வேலைகளை இந்தியன் வங்கி தொடங்கியுள்ளது. இதனை அடுத்து வரும் பிப்ரவரி 15ம் தேதி காலை 9மணி வரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங், ஏடிஎம், யூபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் கிடைக்காது என்று அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Announcement ,ATM ,customers ,Indian Bank , இந்தியன் வங்கி
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...