மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது : கவிஞர் வைரமுத்து ட்வீட்!!

சென்னை : மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் பலியான நிலையில், இன்று மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அறை இடிந்து தரைமட்டமானது. ஒருவர் காயமடைந்தார். இரு வேறு பட்டாசு ஆலை விபத்து சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கண்ட துயர சம்பவங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து..

மனிதர்கள்

பட்டாசுகளை வெடிப்பதுபோய் -

பட்டாசுகள்

மனிதர்களை வெடிப்பது துயரமானது.

அதனினும் பெருந்துயரம்

மனித உயிர்களின் விலை

சில லட்சங்கள் ஆகிப்போவது, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>