மத்திய அரசு எங்கும் எதற்காகவும் கடன் வாங்க விரும்பவில்லை : மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி : 2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். :நாடாளுமன்றத்தில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  கடந்த 1ம் தேதி  மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல இந்த மத்திய பட்ஜெட் உதவும். இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும். பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை. சுகாதார ஆராய்ச்சிக்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர், குஜராத் முதல்வராக இருந்த போது, கிடைத்த அனுபவ அடிப்படையில் பட்ஜெட். நாட்டின் நீண்ட கால வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ள புதிய சீர்திருத்தங்கள் தேவை.

கொரோனா போன்ற சவாலான சூழ்நிலையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய பட்ஜெட் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. விவசாயிகள் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.10.25 கோடி வங்கிக்கணக்குகளுக்கு ரூ1.15 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.இந்திய தொழில்முனைவோர் திறன், நிர்வாகிகள் திறன், வணிக திறன், இளைஞர் திறன் மீது நம்பகத் தன்மை வளர்ந்துள்ளது.மத்திய அரசு எங்கும் எதற்காகவும் கடன் வாங்க விரும்பவில்லை.இந்திய பொருளாதாரத்தின் மீதும் தொழில் வணிகத் திறன் மீதும் பாஜக அரசுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது,என்றார். ஏற்கனவே மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கு ஆனது இல்லை என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>