×

அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் தர்ணா

தி.மலை: அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு எதிராக இன்று ஒருநாள் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அரியர் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்த நிலையில் மீண்டும் கட்டணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரியர் மாணவர்களுள்க்கு தேர்ச்சி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் நீதிமன்றம் தடை விதித்தது.

திருவள்ளுர் பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகிறது. அதன் ஒரு கல்லூரியாக திருவண்ணாமலை அரசினர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை, முதுகலை என மாணவர்கள் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு சுழற்சிகளில் பயின்று வருகிறார்கள். இவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தங்களது தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வு எழுதுவதற்காக தயாராக இருந்த நிலையில் தமிழக அரசாங்கம் அரியர் தேர்வு எழுத தேவையில்லை. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மாணவர்ளின் நலன் கருதி இந்த தேர்ச்சி முடிவை அறிவிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு இளங்கலை படித்தவர்கள் தற்பொழுது முதுகலை சேர்ந்து இரண்டு தேர்வுகள் எழுதி இருக்கின்ற நிலையில் தற்பொழுது தமிழக அரசின் உத்தரவை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மதிக்காமல் கடந்த தாங்கள் தேர்ச்சி அறிவித்த தேர்வுக்கான அரியர் கட்டணத்தை செலுத்தி மீண்டும் அந்த தேர்வினை எழுத வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்துள்ளதாக கூறி இன்று திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தின் முன்பு அமர்ந்து தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுடைய பிரதான கோரிக்கை என்பது தமிழக அரசு அறிவித்த தேர்ச்சி என்பதை தற்போது திருவள்ளூர் பல்கலைக்கழகம் மதிக்காமல் மீண்டும் அந்த தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது மனவேதனையை ஏற்படுத்துகிறது. நாங்கள் அனைவரும் தேர்வு எழுதவும் தயார் ஆனால் அரியர் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டே செலுழ்த்திவிட்டோம். இந்த ஆண்டு மீண்டும் செலுத்த மாட்டோம். அதையே தேர்வு கட்டணமாக வைத்துகொண்டு வேண்டுமென்றால் நாங்கள் தேர்வுகளை எழுதுகிறோம் என்பது மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Tags : Thiruvalluvar University ,Ariyar , Thiruvalluvar University, students
× RELATED முறைகேடுகளை தொகுத்து நூலாக வெளியிட்ட...