×

தமிழகத்தில் 2-ம் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது

சென்னை: முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான 2ஆம் கட்ட தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கியது. ஜனவரி 16ல் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தப்படுகிறது. 166 மையங்களில் 3,027 பேருக்கு கோவிஷீல்டு, 99 பேருக்கு கோவாக்சின் என 3,126 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 26 நாட்களில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் இன்றும் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் நேற்று மட்டும் 15,856 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 10,210 பேருக்கு கோவிஷீல்டு, 3,137 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 13,191 தடுப்பூசி மருந்துகள் வீணாகி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் 609 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவாக்சின் மருந்துகளும் செலுத்தப்பட்டன என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : phase ,Tamil Nadu , Corona vaccine
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான...