×

தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் இறந்த மேலும் 64 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை: தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் இறந்த மேலும் 64 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பங்களுக்கு நிதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அரியலூர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த விஜயகுமார், செங்கல்பட்டு பெருநகர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த பன்னீர் செல்வம்.

சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கியசாமி. மகாகவி பாரதியார் நகர் தலைமைக் காவலர் ஹரிதாஸ், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகுமாறன், நீலாங்கரை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன், கானாத்தூர் சட்டம்-ஒழுங்குப் பிரிவு முதல் நிலை காவலர் செந்தில்குமார்.

சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் எல்லப்பன், வீராபுரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் தமிழ்க்குமரன்.

கோவை ஆயுதப்படை தலைமைக் காவலர் பேச்சிமுத்து; போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், கடலூர் முதுநகர் தலைமைக் காவலர் மனோகரன், ஈரோடு பவானிசாகர் தலைமைக் காவலர் சின்னராஜ்.

காஞ்சிபுரம் ஒரகடம் பெண் தலைமைக் காவலர் பவானி, கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, கரூர் தென்னிலை தலைமைக் காவலர் கணேஷ் பாண்டியன், கிருஷ்ணகிரி தனிப்பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், மதுரை சாப்டூர் காவலர் சோலைமலைக்கண்ணன்; ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் ஏ.எஸ். கண்ணன், நாகப்பட்டினம் மணல்மேடு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்பட விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags : policemen ,families ,accidents ,Tamil Nadu , Funding, CM
× RELATED சேமநல நிதியில் இருந்து 16 காவலர்...