×

ஆஸி. ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் தீம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் விளையாட ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் தகுதி பெற்றார்.மூன்றாவது சுற்றில் உள்ளூர் நட்சத்திரம் நிக் கிர்ஜியோசுடன் மோதிய தீம் 4-6, 4-6 என்ற கணக்கில் முதல் 2 செட்களையும் இழந்து பின்தங்கினார். மூன்றாவது சுற்றில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-3 என வென்றதுடன், அடுத்த செட்டையும் 6-4 என கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் ஆதரவுடன் கிர்ஜியோஸ் கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், பதற்றமின்றி புள்ளிகளைக் குவித்த தீம் 4-6, 4-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி, 21 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பிய), கனடா வீரர் மிலோஸ் ரயோனிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), சூ வெய் சை (சீன தைபே), அரினா சபலென்கா (பெலாரஸ்), முகுருசா (ஸ்பெயின்) ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Tags : Aussie ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...