குன்றத்தூர் பகுதியில் ரேஷன்கடை, மினி கிளினிக் திறப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் பகுதியில் 2 ரேஷன் கடைகள், ஒரு மினி கிளினிக் ஆகியவற்றை அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார். குன்றத்தூர் பேரூராட்சி கரைமாநகர், மணஞ்சேரி ஆகிய பகுதிகளில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 27.6 லட்சத்தில் மேற்கண்ட பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு, ரேஷன் கடைகளை திறந்து வைத்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்பட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

முன்னதாக சிக்கராயபுரம் ஊராட்சியில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அங்கு, ஏராளமானோர் வரிசையில் நின்று சிகிச்சை பெற்று சென்றனர். இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>