தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி பெண் சாவு

ஆவடி: அண்ணனூர் ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம். ரயில்வே ஊழியர். இவரது மனைவி தேன்மொழி(52). நேற்று முன்தினம் இரவு தேன்மொழி வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அண்ணனூர் - திருமுல்லைவாயல் ரயில் நிலையகளுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர் மீது மோதியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தேன்மொழி பரிதாபமாக இறந்தார்.  தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories:

>