லாரி மோதியதில் சென்டர் மீடியனில் சுற்றிசுழன்ற கார்

பூந்தமல்லி: குன்றத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று ஆவடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி, கார் மீது வேகமாக மோதியது.  இந்த விபத்தில் கார் சுழன்றபடி சாலையின் தடுப்புச்சுவர் மீது ஏறி குறுக்கே நின்றது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக  காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான காரை மீட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories:

>