பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி தலைவர்கள் இரங்கல்

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கவர்னர், துணை முதல்வர், மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காநதி: பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நிவாரணம் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

 பன்வாரிலால் புரோகித் (தமிழக கவர்னர்): விருதுநகர் மாவட்டம் அஞ்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 17பேர் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைகிறேன். ஓ.பன்னீர் செல்வம் (துணை முதல்வர்): விருதுநகர் சாத்தூரில் நிகழ்ந்த தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனயடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு காயமுற்றோர் விரைவில் பூரணநலம் பெற இறைவனை வேண்டுகிறேன். இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,  சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கான நிவாரண தொகையை அதிகரிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>