தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள் சால்வைகள், பூங்கொத்துகளை தவிர்த்து புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டும்

சென்னை: ”சால்வைகள், பூங்கொத்துகள், மாலைகள் போன்றவற்றை தவிர்த்து விட்டு புத்தகங்களை பரிசளிக்குமாறு” திமுக ெதாண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நான், பல்வேறு மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளேன். உற்சாக மிகுதியில் திமுக நிர்வாகிகள் சிலர் என்னை வரவேற்று ப்ளெக்ஸ், பேனர்கள் வைப்பதை காண முடிகிறது. தயவு செய்து அவற்றை அறவே தவிர்த்திட வேண்டும். இதேபோல், சுவரொட்டிகளில் என் படங்களை பயன்படுத்தக்கூடாது.  நம் கழகத்தை கட்டமைத்த பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர், நம்மை வழிநடத்தும் கழக தலைவர் ஆகிய நான்கு தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எனக்கு நினைவுப் பரிசு தரும் தோழர்கள் சால்வைகள்-பூங்கொத்துகள்-மாலைகள் போன்றவற்றை தவிர்த்து விட்டு புத்தகங்களை பரிசளிக்குமாறு வேண்டுகிறேன். இப்படி நீங்கள் தரும் புத்தகங்கள் பலர் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு வழங்க ஏதுவாக இருக்கும். எளிமையே வலிமை என்பதை உணர்ந்து இணைந்து செயல்படுவோம். நம் தலைவர் தலைமையில் திமுக அரசை அமைப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More